
தாய்லாந்தில் உணவக கழிவறைக்குள் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நம்மூரில் சிலர் கழிவறைக்குச் செல்லும் போது அங்குச் சிறிய கரப்பான்பூச்சியைப் பார்த்தாலும் பதறியடித்து வெளியே ஓடி வருவார்கள். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்குச் செல்லும் போது, அங்குப் பெரிய பாம்பு ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே பகீர் என்று இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் க்னுப் போவின் என்ற ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்குக் கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக்கொண்டு 8 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது இதைக் கண்டதும் போவின் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது செல்போனை எடுத்து அந்த பாம்பைப் படம் பிடித்துள்ளார். பின்பு அங்கிருந்த சக ஊழியர்களை அழைத்துள்ளார். அவர்களும் பாம்பைப் பார்த்து அதிர்ச்சிடையந்து, மீட்புக் குழுவினருக்குப் பாம்பைப் பிடிப்பதற்காகத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், மீட்புக் குழுவினர் வருவதற்குள் அந்த 8 அடி நீளப் பாம்பு மறைந்துவிட்டது. இந்த செய்தியை தி சன் நிறுவனம் வெளியிட்டிருந்தது. கழிவறைக்குள் பாம்பு இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பாம்பு இருந்த பகுதிக்குச் சற்று தொலைவில் மீட்புக் குழுவினர் ஒரு மலைப்பாம்பைப் பிடித்தனர். அது தான் இந்த பாம்பாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
Huge python smashes through a toilet ceiling at a restaurant pic.twitter.com/UGdC77vjwL
— The Sun (@TheSun) December 15, 2020
