வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை கலாய்த்த பிரபல நடிகை!

அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல நடிகை கஸ்தூரி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.

இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை!” என பதிவிட்டுள்ளார்

 

348 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன