சனிக்கிழமை, மே 2
Shadow

ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்!

 

ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த சீமான்!

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து. 
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. 
கடந்த 15 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், 
கமல், சீமான், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
இந்த சூழலில் சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், 
அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 
கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில்தான் சீமானின் கடன் குறித்த உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. அதாவது சீமானின், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் தாக்கல் செய்திருந்த பிரமாணப்பத்திரத்தில் 8,97,557 ரூபாய் ICICI வங்கியில் கடன் இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால் 2021இல் பிரமாணப்பத்திரத்தில் கடன் இல்லை என்று சொல்லி இருக்கார். 2019-20 ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி பார்த்தால் 1000 ரூபாய் வருமானத்தை வைத்து 9 லட்சம் ரூபாய் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்.

இந்த சர்ச்சை எழுந்த பின்னர் சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், அதற்கான அவர் செலுத்திய வரி தொகை ரூ.1,000 என்பதும் தெரியவந்தது. எப்படியோ தவறாக வருமானம் ரூ.1000 என பதிவிடப்பட்டதாக சீமான் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது, அப்படியே இருக்கட்டும், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வைத்து எப்படி 8,97,557ரூபாயை அடைக்க முடியும்?

 

434 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன