வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

234 தொகுதியிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன். இதனால், பல இடங்களுக்கு செல்கிறேன். ஹெலிகாப்டருக்கான செலவு எனது தேர்தல் செலவின கணக்கில்தான் வரும்.

எங்களது கட்சி தேர்தல் அறிக்கை விரைவில் வரும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதை தற்போது கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இது போன்ற நல்ல விஷயம் மக்களுக்கு செல்ல முன்னோடியாக இருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற எங்களின் திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

“கமல்ஹாசன் அறிவித்த திட்டத்தை பலரும் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கூறி இருக்கிறார். நாங்கள் பிறருக்கு முன் உதாரணமாக இருக்கிறோம்.

366 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன