சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

 

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.இராமமூர்த்தி அறிக்கை

வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவருமான சமூக போராளி சி.என்.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழகத்தில் சமூக நீதியின் பெயரால் பல போலிகள் உலா வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே சமூக நீதி பேசுவதும், சமத்துவம் பேசுவதும், சமுதாய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாபாரிகளின் முகத்திரையை இந்த தேர்தலில் கிழித்து எறிய வேண்டும்.

இதற்கான சரியான தலைமையை தமிழக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

தமிழக்த்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது தேர்தல் நெருங்கியதும் அள்ளி வீசும் தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது ஏன் இவர்கள் நிறைவேற்றவில்லை?

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கூட கடுமையாக போராட வேண்டி உள்ளது.

எதற்கெடுத்தாலும் எதிர்க் கட்சிகளை குறை கூறும் மத்திய மாநில அரசுகள் தங்கள் கைகளில் உள்ள அதிகாரத்தில் தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியல் போட முடியுமா?

வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்த சமுதாய மக்களுக்கு எந்த உதவியையும் செய்யாமல், வீட்டுக்குள்ளேயே இருந்து காணொளியில் கதை வசனம் பேசிய பல போலி சமூக தலைவர்கள் இப்போதும் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.

மாற்றத்தை தேடியவர்கள் இவர்கள் இன்றைக்கு வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு அரசியல் செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறார்கள்.

அதே நேரம், வன்னிய சமூக மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் செய்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் மிகையாகாது. அவரின் வழித்தோன்றலாக உருவெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்றும் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வலம் வரும் அதிமுக -பாஜக-பாமக கூட்டணியின் நாடகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும், சமூக நீதியும் சமத்துவமும் நிலைக்க போராடி வரும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வைக்கவும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி முழுமையாக பணியாற்றும்.

ஒன்று சேருவோம்… வென்று காட்டுவோம்… மக்களை காப்போம்!

இவ்வாறு அறிக்கையில் சி.என்.இராமமூர்த்தி கூறியிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன