
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை!
ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர் ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கிருஷ்னா நதியில் , 13 கிலோமீட்டர் கங்கை நதியில் நிந்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2019 ல் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் போர்பந்தரில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்

கடலில் நீந்துவது அவரது லட்சியமாக இருந்த நிலையில், தற்போது இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையில் உள்ள கடல் பகுதியில் நீந்தி கடப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார். இவர் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகில் வர உள்ளார். மேலும் இரவு முழுவதும் படகில் தங்கியிருந்து வெள்ளிக்கிழமை அன்று காலை நான்கு மணி அளவில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கி , மாலை 4 மணிக்கு தனுஷ் கோடி கரையை வந்தார்.
இலங்கையில் தலைமன்னாரில் இருந்து ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி வரை கடலில் 28.5 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து நிறைய பேர் சாதனை படைத்துள்ளனர். நீச்சல் வீரரான குற்றாலீசுவரன் சிறுவனாக இருந்த போது இவ்வாறு நீந்தி சாதனை படைத்தார். அதன் பின்னர் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பல வீரர்கள் நீந்தி கடந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைருவரும் ஆண்கள்.

இந்த நிலையில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 48 வயது ஆசிரியையும், நீச்சல் வீராங்கனையுமான சியாமளா ஹோலி நேற்று நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இவர் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 28.5 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி 35 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
