
ஓட்டப்பாதையில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இணையாக ஓடிய நாய்!
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உட்டா (UTAH) -வில் பள்ளிச் சிறுமிகளுக்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. 200 மீட்டர் தொலைவிலான தொடர் ஓட்டம் நடைபெற்றபோது சிறுமிகள் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டப்பாதையில் நுழைந்த நாய் ஒன்று போட்டியாளர்களுக்கு இணையாக ஓடியது.
பின்னர் அனைவரையும் முந்திச் சென்ற நாய், கடைசியாக எல்லைக் கோட்டை முதல் ஆளாக கடந்து போட்டியிலும் வெற்றி பெற்றது. போட்டியை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும், நாய் போட்டியாளர்களை முந்திச் செல்வைதக் கண்டு ஆரவாரக் குரல் எழுப்பினர்.
லோகன் உயர்நிலைப் பள்ளியில் இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டியில் முன்னணியில் சென்று கொண்டிருந்த கேட் ஹேவுட் (Kate Heywood) எல்லைக் கோட்டை அடைவதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்.
திடீரென பார்வையாளர்களின் கூச்சல் அதிகரித்ததால் வேறொருவர் முந்திச் செல்ல வருவதாக கருதி, இன்னும் வேகமாக ஓடினார். அவர் எல்லைக் கோட்டை அடைவதற்கு நொடிப் பொழுது முன்பாக, அவரை ஹோலி நாய் முந்திச் சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பின்னர் சம்பவத்தைக் கேட்டு சிரிப்பில் மூழ்கினார்
