வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

 

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ்ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு 

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதாஇனியாசிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யாபரணிநான்கடவுள் ராஜேந்திரன்ஊர்வசிநிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டேமன்சூரலிகான்ஆர்யன்சாமிநாதன்பாவாலட்சுமணன்பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை.

ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ்ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது.

இந்த படத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டார்கள்.

மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது.

 

அதனால் பொட்டு படம் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.

தெலுங்கில் NkR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

தெலுங்கில் சென்சார் ஆன உடனே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப் படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

481 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன