வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் அத்தித் பூத்தார்போல வந்த படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம் தான் ரைட்டர்.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ரைட்டர் என்பவரின் பவர்புல் அதிகாரம் என்ன என்பதை சொல்வதற்கு பதில் சமுத்திரக்கனி போன்ற மனசாட்சி உள்ள நபர்களும் போலீசாக இருக்கிறார்கள் என்பதை செல்வதற்கு ஒரு சபாஷ்.

ஒரு போலீஸ் கதைக்குள் திறமை இருந்தும் ஜாதியால் பதவியை பெற முடியாமல் மேலதிகாரியின் அடக்குமுறையால் தன் உயிரையே பலி கொடுக்கும் இனியா கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் நெஞ்சை உலுக்கும் நிஜம். இனியாவின் அந்த குதிரையேற்றம் ப்பா… என்ன ஒரு காட்சி…

கதைப்படி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பி.எச்.டி. படிக்கும் ஒரு மாணவன் திடீரென போலீஸ் பிடியில் சிக்கி எப்படி வாழ்வை தொலைக்கிறார்? எதற்காக அவர் போலீஸ் பிடியில் சிக்க வேண்டும்? அவர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பதும், கிளைக்கதையாக போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் போலீஸ் சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்வதும் கடைசியில் போலீஸ் சங்கம் அமைந்ததா? போலீஸ் பிடியில் சிக்கிய மாணவர் தப்பித்தாரா? என்பதை இயக்குனர் மிக புதுசாக வலியோடு சொல்லி இருக்கிறார்.

ரைட்டர் முதல் பாதியில் பெரிய அழுத்தம் இல்லாமல் பயணிக்கும் கதை இரண்டாம் பாதியில் வேகமெடுத்து ஓடி முடிகிறது.

போலீஸ் ஏ.சி.யாக நடிக்கும் அந்த நபரின் மேனரிசங்கள் ரொம்ப புதுசு… தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதை நாயகனாக நடித்த அந்தோணி இந்த படத்தில் சின்ன ரோல்தான் என்றாலும் டைமிங் காமெடியும் யதார்த்த நடிப்பாலும் மனசில் நிற்கிறார்.

அதிகம் பேசும் சமுத்திரக்கனி இந்த படத்தில் அளவாய் பேசுகிறார்… அழுத்தமாக நடிக்கிறார்…

வெள்ளந்தியான கிராமத்து அண்ணாக வரும் சுப்பிரமணிய சிவாவின் யதார்த்தமான நடிப்பு தனிரகம்.

எல்லா துறைகளிலும் ஜாதி பாகுபாடு இருப்பதை தெரிந்தாலும் காவல் காக்கும் துறை குறித்து இயக்குனர் புது பாணியில் சொல்லி இருக்கிறார்.

இதை எல்லாம் அழகாக யோசித்த இயக்குனர் உண்மையான ரைட்டர் கதையை சொல்லாமல் வேறு எதையோ சொல்லி இருப்பதுதான் மெல்ல இடிக்கிறது.

போலீசை குறை சொல்லாமல் இருந்தாலும் காக்க வேண்டிய போலீசில் இன்னும் மாற்றங்கள் வர வேண்டும் என சொல்லி இருப்பதற்கு பாராட்டுக்கள்.

முதல்பாதியில் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் பல திடுக் இருந்தாலும் கிளைமாக்ஸ் இன்னும் யோசித்திருக்கலாம்.

இருந்தாலும் யாரும் சொல்லாத கதையை எடுத்ததற்காக ரைட்டர் டீமுக்கு வாழ்த்துகள்.

– கோடங்கி

மதிப்பீடு : 3.5/5

418 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன