திங்கட்கிழமை, மே 13
Shadow

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட “ராவாக” வரும் படங்கள் மிக மிக குறைவு.

அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம்.

கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்… ஆனால் வயலென்ஸ் யப்பா… முடியலடா சாமி…

கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார்.
அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை.

ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்…

அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட்.

இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும்.

வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்காமல் சும்மா இருக்கலாம்… இந்த ராக்கியில் பாரதிராஜாவை விட மிரட்டியது தன்ராஜ் கேரக்டரில் நடித்தவர்தான் மிரட்டலில் அல்டிமேட் ரகம்.

அந்த ரோடு ரோலர் கான்செப்ட் எத்தனை கொடூரம்…

எந்த எக்ஸ்ட்ரா பூச்சுக்களும் செய்யாத ரா பிலிம் ராக்கி.

தமிழ் சினிமாவுக்கு இந்த ஜானர் படங்கள் ரொம்ப குறைவு… அந்த வகையில் ராக்கி பேசும் படம்!

– கோடங்கி

406 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன