ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்களால் “உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல் செய்கிறார் என பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் தண்டாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. எனவே, அற்பமான காரணத்தை கூறி திரும்பி சென்று விட்டார்.
மோடி, நாட்டின் மதிப்புக்குரிய தலைவர். இத்தகைய மலிவான தந்திரத்தை கையாள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்கிறார்கள்.
அதற்குத்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். போராட்டக்காரர்கள் ஒரு கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருக்கும்போது எப்படி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்?
154 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன