
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல்,
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது.
இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது.
அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் விழாக்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட நிலையில் பிரதமர் கலந்து கொல்ள இருந்த மதுரை பொங்கல் விழாவும் ஒத்தி வைக்கப்பட்டதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் பஞ்சாப் சென்ற மோடி அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொல்ள முடியாதபடி திடீர் எதிர்ப்பு போராட்டத்தால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டில்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களின் சாலை மார்க்க போராட்டத்தால் ஒரு பிரதமர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பியது இதுதான் முதல் முறை.
