செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்!

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்

விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கனடா மருத்துவர் ஒருவர் அவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

டொரண்டோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

விமானம் தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது, திடீரென விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என விமானப் பணிப்பெண்கள் கேட்க, ஆயிஷா எழுந்து என்ன விஷயம் என கேட்டிருக்கிறார்.

விமானத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இடையடுத்து உடனடியாக விமானத்திலிருந்த செவிலியர் ஒருவரும், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் டாக்டர் ஆயிஷாவுக்கு உதவிக்கு வர, நடு வானில், நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அந்தப் பெண்.

ஆயிஷாவின் உதவியால் நெகிழ்ந்து போன அந்தப் பெண், அற்புதமாக நடுவானில் பிறந்த தன் குழந்தைக்கு மிரக்கிள் ஆயிஷா (Miracle Aisha) என்று பெயரிட்டிருக்கிறார்.

தன் பெயரை குழந்தைக்கு சூட்டியதால் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த Dr. ஆயிஷா, தான் கழுத்தில் அணிந்திருந்த தன் பெயர் பொறிக்கப்பட்ட நெக்லஸை கழற்றி குழந்தையின் கழுத்தில் அணிவிக்க, மற்ற பயணிகள் கரவொலி எழுப்ப,

அப்போதுதான் தான் ஒரு விமானத்தில் பயணிப்பதையும் தனது செயலை மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Dr. ஆயிஷா.

800 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன