சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

 

 

ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி!

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள்.

இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.

சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது.

இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத நிலை உள்ளது.

இந்த நிலையை மாற்றவேண்டும் என்று வன்னியர்கூட்டமைபின் தலைவர் சி. என். இராமமூர்த்தி  முயற்சி எடுத்தார்.

அதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து வெற்றியும் பெற்றார்,  இந்த வழக்கு எண்: 26565/2011 என்பதாகும்.

இந்த வழக்கின் வேண்டுதல் வன்னிய பொது சொத்து வாரியம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பதே.

இந்த வழக்கு மிக சிறப்பாக நடாத்த பெற்று 18.11.2011 அன்று வன்னியர் கூட்டமைப்பிற்கு சாதகமாக அமைந்தது.

 

இந்த தீர்ப்பை தொடர்ந்து சட்ட வடிவமாக்க 15.6.2018 அன்று அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி,  முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றினை எழுதி இன்னும் பல முறைகள் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார்.

அதை வலியுறுத்தும் வகையில் அரசு உரிய சட்டம் இயற்றுவதற்கான கருத்தரு கடிதம் ஒன்றினை 27.12.2011 அன்று எழுதினர்.

அதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு வாரியத்தை அமைத்து அரசாணை எண்: G.O.(MS) No.20 dated 02.03.2009 அன்று வெளியிட்டது.

அந்த அரசாணை படி இந்த வாரியத்தின் முக்கியமான பணி வன்னியர் அறக்கட்டளைகளை / தர்ம சாசன அருட் கொடை பணிகளை சரியான முறையில் கண்காணித்து அதன் மூலம் வன்னியர்குல ஷத்திரியர் இன மக்கள் பயன் பெற வேண்டும் என தெரிவித்தது.

இந்த வாரியம் செயல் படுவதற்காக எண். 736, அண்ணா சாலையில் உள்ள LLA வளாகத்தில் 4 வது தளத்தில் அமைக்கபட்டது.

சந்தானம் ஐஏஎஸ்

 

தமிழ்நாடு வன்னியகுல க்‌ஷத்ரிய பப்ளிக் டிரஸ்ட் அண்ட் எண்டோன்மெண்ட் ஆக்ட் -2018 இன்படி, ‘வன்னியர், வன்னிய, வன்னிய கவுண்டர், கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னி குல க்‌ஷத்ரியா என்ற பெயர்களைத் தாங்கியிருக்கும் அனைத்து டிரஸ்டுகளும் வன்னிய பொதுச் சொத்து நலவாரியத்துக்கு உட்பட்டதாகும். பழங்காலங்களில் இந்த டிரஸ்டுகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்துக்காக செயல்படுவதை இந்த டிரஸ்ட் உறுதி செய்யும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் 2019 பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அமைக்கப்பட்டது.

வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ..ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டார்.

உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டன.

உறுப்பினர் செயலாளராக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்துதல் துறை சிறப்பு டி.ஆர்.ஓ.வான பிருந்தா தேவியும்,

சிறப்பு பார்வையாளராக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வுபெற்ற பொறியாளரான ஆர்.தியாகராஜனும் நியமனம் செய்யப்பட்டனர்.

 

இதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் 18 மாவட்டங்களில் வன்னியர்கள் பெயரில் அமைந்திருக்கும் டிரஸ்டுகளை தமிழக அரசு பட்டியலிட்டது.

இதுபற்றிய அறிவிப்பில் மேலும் வன்னியர்களுக்கான சமுதாய டிரஸ்டுகள் ஏதும் இருந்தால் அவற்றை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வன்னியர் கல்வி அறக்கட்டளையை தமிழக அரசு கைப்பற்ற சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

இப்போது அதிமுக-பாமக கூட்டணியில் இருப்பதால் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி அரசு ஏதும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் சில வன்னிய பிரமுகர்கள், ‘வன்னியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட வன்னியர் கல்வி அறக்கட்டளையை

சட்டப்படி அரசு வன்னிய பொதுச் சொத்து நல வாரியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு மனுவும், அதையடுத்து நீதிமன்றம் செல்லத் திட்டமும் வைத்திருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகள் நடப்பது பாமகவுக்குத் தெரிந்தது

 

அதனால் தொடர்ந்து இதே பெயரிலேயே டிரஸ்ட் நீடித்தால் சட்ட ரீதியாக அரசின் வசம் போக வாய்ப்பிருக்கிறது.

ஏறகக்குறைய பல நூறு கோடிகள் சொத்துகள் கொண்ட வன்னியர் கல்வி அறக்கட்டளை அரசின் வசம் போகாமல் தடுப்பதற்காகத்தான் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றப்பட்டிருக்கிறது.

டாக்டர் ராமதாஸ் என்ற பெயரில் வன்னியர் என்ற பதம் இல்லாததால் இதை அரசு இப்போது கைப்பற்ற முடியாது.

அதிமுக அரசின் புரிந்துணர்வு இல்லாமல் இந்த பெயர் மாற்றம் நடந்திருக்க முடியாது.

ஆனாலும் இந்த பெயர் மாற்றம் வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்பட்டிருந்தால் அதையும் சட்ட ரீதியாக சேலஞ்ச் செய்யலாம் என்கிறார்கள் பாமகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் வன்னிய பிரமுகர்கள்.

இந்த சட்டம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அவற்றை கைப்பற்ற இச்சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சொத்துகளை தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அதேபோல, ஒவ்வொரு அறக்கட்டளையிலும் வாரியத்தின் சர்வே அலுவலர் புலத்தணிக்கை செய்து, அதன் நிர்வாகிகளுக்கு உரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

பின்னர், அந்த சொத்துகளின் ஆவணங்களை சேகரித்து அதன் விவரங்களை அரசிதழில் வெளியிட வேண்டும்.

அதன்படி, தற்போது 118 சொத்துகள் வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு சொத்துகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாரிடம் இருந்த பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள 12.6 கிரவுண்டு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார்ரூ.87 கோடியாகும். அதுபோல, திருவொற்றியூரில் ரூ.50 கோடி மதிப்புள்ள வன்னியர் மகா சங்கத்துக்கான சொத்து ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தவறான விவரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வன்னியர்களது அறக்கட்டளைகள் குறித்து தற்போது மாவட்டம்தோறும் ஆய்வு செய்ததில் 118 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர், சேலம் எஸ்.கந்தசாமி கவுண்டர்,

திண்டிவனம் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட 63 அறக்கட்டளைகள் வாரியத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன

 

இந்த சூழலில் பொது சொத்துவாரிய தலைவர் பதவி பிபரவரி முதல் வாரத்தோடு முடிவுக்கு வருகிறது.

இப்போது தலைஅராக இருக்கும் சந்தானம் ஐ ஏ எஸ் மீண்டும் நீடிப்பு பெற முயற்சிக்கிறார்.

அதே நேரம் பல கோடி மதிப்புள்ள பல அறக்கட்டளைகளை மருத்துவர் ராமதாஸ் த்ன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அவற்றை மீட்ட்டெடுக்க சரியான தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன் படி இந்த பொது சொத்து வாரியம் அமைக்க வ்ழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்திக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் கடந்த எம்.பி தேரத்லிலும் சமீபத்திய சட்டமனற தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக சி.என்.இராமமூர்த்தி பரபரப்பாக பிரச்சாரம் செய்தவர் என்பதும்,

இப்போதுவரை திமுக தலைவர் ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருப்பதாலும் வாரியதலைவர் பதவி இவருக்கே கிடைக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

– கோடங்கி

696 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன