வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

 

 

 

சென்னை ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காகது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..  நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..

அந்த வகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என். சுவாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்..

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது..

நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, ”எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் சொல்ல அந்த உத்தரவை காட்டுங்கள் என கேட்டபோது,

இன்னொரு அதிகாரி ”நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது..

கடந்த மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு பாடலாக அரசு அறிவித்தது.

 

 

மேலும் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

இந்த சூழலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததோடு, ஆணவ போக்கோடு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு, இந்த அதிகாரிகள் ஏதோ உள் நோக்கத்தோடு திட்டமிட்டு இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழகத்தில் அமைதியிமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களோ எனற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த திமிர் பிடித்த அதிகாரிகள் மீது அரசு துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதோடு, இல்லாத நீதிமன்ற உத்தரவை கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

441 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன