செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

 

பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது.

இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது… காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி.

உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.

 

 

 

அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த ‘மாயா’ (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற முதல் பெண் மையப் படங்களில் ஒன்றாகும். அதைத் தொடர்ந்து டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கிய அஸ்வினுடன் இணைந்து படத்தின் கதையை எழுதியிருந்தார் காவ்யா.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்திலும் அஸ்வின் மற்றும் காவ்யா இணைந்து நடித்துள்ளனர்.

452 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன