வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

சுந்தர் சி இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்!

 

 

சுந்தர் சி தலைநகரம் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார்.

மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இது உருவாகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது சுந்தர் சி-க்கு புதிதல்ல.

அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த கலகலப்பு படத்தில் இரண்டு பேரும், கலகலப்பு 2 படத்தில் மூன்று பேரும் நாயகர்களாக நடித்து இருந்தனர்.

இப்போது மீண்டும் மூன்று பேரை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். நாயகிகளாக மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிசை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது.

சுந்தர் சி-யின் பிற படங்களைப் போல இதுவும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது

275 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன