திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஒரு யூரோவுக்கு வாங்கப்பட்டு சொகுசு பார் ஆக மாற்றப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறது!

 

நம்மூரில் ஓடாமல் நின்று போன கார், டெம்போ, வேன், சில சமயங்களில் பேருந்துகளை கூட சீரமைத்து,

அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து சாலையோர உணவகக் கடைகளாக நடத்தி வருவதை நாம் கண்ணெதிரே பார்த்திருப்போம்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இது போன்ற பழைய வாகனங்களில் எண்ணற்ற அழகூட்டும் பணிகளை செய்து,

சகல வசதிகளுடன் உணவகங்களை சிலர் நடத்தி வருகின்றனர்.

 

 

ஆனால், ஒரு முழு விமானமும் இதுபோல மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதில் பார் செயல்பட்டு வரும் செய்தி நமக்கு மிகவும் புதிது. அதிலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை, வெறும் நூறு ரூபாய்க்கு வாங்கி, அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடிகிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ஏதோ இரண்டாம் தர நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு வந்திருந்தால் கூட அது நம்பும் படியாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

 

 

மிகவும் சேதமடைந்த நிலையில் வாங்கப்பட்ட அந்த விமானம், தற்போது சொகுசு வசதிகளை கொண்ட பார் ஆக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு தனிநபர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொண்டாட்டங்கள் வரையில் அனைத்து விதமான பார்ட்டிகளும் நடைபெறுகின்றன

தற்போது இங்கிலாந்தின் கோட்ஸ் வால்ட் விமான நிலையத்தில் இந்த சொகுசு பார் விமானம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விமானம் வெறும் ஒரு யூரோ மதிப்புக்கு வாங்கப்பட்டதாகும். அதாவது, இந்திய மதிப்பில் இது ரூ.102 ஆகும்.

 

198 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன