புதன்கிழமை, ஜூலை 8
Shadow

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

 

 

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார்.இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது.

எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார். மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களைக் கடந்த பிப். 1ஆம் தேதி விளக்கப்பட்டுள்ளது. . நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வேண்டுமென்றும் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில்  ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளில் “ஆட்டுக்கும் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?“ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என்றுள்ளார்.

 

435 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன