செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்!

 

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி  வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கபாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவார்கள். உக்ரைன்-ரஷியா இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவியபோதே அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்

5பேர் மும்பைக்கும் 5பேர் டெல்லிக்கும் தனித்தனி விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்

இவர்கள் நேரடியாக அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்

இவர்களுக்கான கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்

விமான நிலையத்திற்கு நேரடியாக சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாணவர்களை வரவேற்றார்

 

 

751 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன