
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் இந்நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் நம்பகமான செய்தியை அறிவதில் சிக்கல் ஏற்படும் என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
பிபிசி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களும் மாஸ்கோவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளன.
முன்னதாக ரஷ்ய ராணுவத்தை பற்றி வதந்தி பரப்புவோருக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்தில் அதிபர் புட்டின் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பெரிய அளவில் ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புதின் இந்த தடையை வித்திதிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காரணம், போரில் பல ஆயிரம் வீரர்களை கொன்று குவித்ததாக உகரைன் அதிபர் அறிவித்ததால் ரஷ்ய மக்கள் மத்தியில் அதிபர் புதினுக்கு செல்வாக்கு சரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலக அரங்கிலும் புதினுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது

