வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Ukraine War – ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்களித்த இந்திய நீதிபதி!

சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது.

இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவைக் கண்டித்து வாக்களித்தார்.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இது தங்களுக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து வாக்களித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பண்டாரி இந்திய அரசின் உதவியுடனேயே அமர்த்தப்பட்டார் என்றாலும் கூட அவருடைய இந்த வாக்களிப்பு தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படுகிறது.

இந்தியா இதற்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டங்களில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்தது. உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றே இன்றளவும் தெரிவித்து வருகிறது.

அதனால், சர்வதேச நீதிமன்ற இந்திய நீதிபதியின் தனிப்பட்ட கருத்து தனிப்பட்டது என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட இந்த உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்காமல் புறக்கணித்தால், சர்வதேச அரங்கில் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.

504 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன