வெள்ளிக்கிழமை, அக்டோபர் 23
Shadow

”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார்கள்.
அதுபோல் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தவும் செய்வார்கள்.
அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு,
2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும்,
2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என இருவரது படத்தையும் அச்சிட்டு ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன