
*திடீரென கிளம்பிய புகை: இரண்டாக பிளந்த விமானம்!*
*பதற வைக்கும் பகீர் வீடியோ*
*கோஸ்டாரிகாவில் அவசரமாகத் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஒன்று அப்படியே இரண்டாகப் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.*
*பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. கோஸ்டாரிகாவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்திற்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது.*

*புறப்பட்ட 25 நிமிடங்களில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க மீண்டும் திரும்பி உள்ளது. அதன்படி காலை நேற்று காலை 10:30 மணிக்கு (1630 GMT) விமானம் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.*
*விபத்து ஏற்படும் போது, விமானத்தில் விமானி உட்பட 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.*

