வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்தேரி போலீஸ் நிலையத்தில் ரோஜ்கர் அகாரி இந்திய குடியரசு கட்சி பொது செயலாளர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் கோடா நகரங்களில் ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் வெளியான தியேட்டர்களை குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். ஜெய்ப்பூரில் சல்மான்கான் போஸ்டர்களை கிழித்ததுடன், கட்-அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதேபோல் பிக்கானர், அஜ்மீர் மற்றும் அல்வார் உள்ளிட்ட பகுதிகளிலும் சல்மான்கான் படம் வெளியான தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது
303 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன