சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

 

#வன்னியஇனத்திற்கானசமூகநீதியும்திராவிடமுன்னேற்றக்கழகமும்”
#வன்னியர்  கூட்டமைப்பு மற்றும் #அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் #சிஎன்இராமமூர்த்தி அவர்கள் எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு #முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் “வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இருக்கிறார்.
இந்த நூலில் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் உண்மையான தகவல்களுடன் , அதில் பலியான 25 தியாகிகளின் முழு விவரங்களும், அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து அவர்கள் குடும்பங்களுக்கு திமுக அளித்த நன்மைகளின் முழு விவரங்கள் உட்பட இதுவரை வெளிவராத பல உண்மைகள் ஆதாரத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நூலை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் .மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு. சி.என்.இராமமூர்த்தி அவர்கள் சால்வை அணிவித்து சமூக நீதிக்கு அடையாளமாக பெரியார் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
புத்தகத்தை சிரித்தபடியே வெளியிட்டு வாழ்த்தியதோடு ஒரு பிரதியில் வாழ்த்து சொல்லி கையொப்பம் போட்டு கொடுத்தார்.
மேலும் அருகில் இருந்த மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கும் புத்தகங்களை சி.என்.இராமமூர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் .ஏ.கே. வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் அன்புராஜ், மாநில செய்தி தொடர்பாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.
385 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன