வெள்ளிக்கிழமை, ஜூன் 7
Shadow

செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள “போர் பாயிண்ட்ஸ்” ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. இதில், மூன்று வெவ்வேறு அணிக்கு பங்கேற்றன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார்.

இதன் மூலம், ரோனக் இந்தியாவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், தனது வெற்றியை பகிர்ந்துக் கொண்ட ரோனக் பயிற்ச்சியாளருக்கு நன்றி தெரிவித்தார்.

76 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன