சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின.

சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது. நேற்று இரவு நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதிய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ஆங்காங் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இலக்கை நோக்கி விளையாடிய ஆங்காங் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆங்காங் அணி தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இதன் மூலம் அந்த அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன.

இந்த அணி முதல் போட்டியில் சிங்கப்பூரை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அடுத்து குவைத்தை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

310 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன