புதன்கிழமை, மே 20
Shadow

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

 

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

”மிரள்” படத்தலைப்பின் மூலம் படம் முழுக்க படம் பார்ப்பவரை மிரள வைக்க நினைத்த இயக்குனர் சக்திவேலின் கணிப்பு தவறாகவில்லை!

பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைத்து பட்த்தை தொடங்குகிறார்கள்… அப்போது ஆரம்பிக்கும் மிரட்சி இடைஇடையே காணாமல் போனாலும் கிளைமாக்ஸ்வரை வந்து முடிவது புதுசுதான்.

காதல் திருமணம் செய்து கொண்ட பரத்தும் வாணி போஜனும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு மகன் அங்கித்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு போகிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் வந்து சேர்ந்து கொள்கிறார்.

அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள்..

ஒரு வழியாக குலதெய்வ வழிபாடு முடிந்த கையோடு காரில் புறப்படும் பரத் வாணிபோஜன் குடும்பம் வழி நெடுக சந்திக்கும் திக் திக் நிமிடங்கள் தான் மிரள்!

தலைப்புக்கு ஏற்றார்போல மிரட்டலாக பிரசாத் பின்னணி இசையும் இரவு நேரகாட்சிகளும் மிரட்டுகிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு பரத் மீண்டும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி இருகிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் உள்ளே புகுந்தாலும் அதும் ரசிகர்காளை ம்ரட்டுவதால் பரத் தேறி இருக்கிறார்.

அழகான வாணி போஜனும் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்கிறார்.

வழக்கமாதான் நடிக்கும் படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக வந்து சில காமெடி காட்சிகளில் தலைகாட்டும் ராஜ்குமாருக்கு இதில் கொஞ்சம்வித்தியாசமான ரோல்… கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்கிறார்.

பெரும்பாலும் படம் தொடங்கும் போது 20 நிமிட காட்சிகளை பார்க்காமல் விட்டால் கதை புரியாது என்பார்கள்… ஆனால் இதில் முதல் பாதி பார்க்காமல் விட்டாலும் கடைசி கிளைமாக்ஸ் 20 நிமிடங்களை பார்த்தாலே முழுக்கதையும் புரிந்து விடும்.

ஒருவேளை கடைசி 20 நிமிஷத்தை பார்க்காமல் விட்டால் கதை புரியாது… அப்படி ஒரு மிரட்டலான கதைதான் மிரள்.

வாணி போஜனின் தந்தையாக வரும் கே.எஸ். ரவிக்குமார் கெத்தாக வந்து போகிறார். இவர் தான் ஏதோ செய்திருக்கிறாரென்பதை கண்டுபிடிக்க முடிந்தாலும் என்ன செய்தார் என்பதை கணிக்க முடியாதது இயக்குனருக்கு பலம்.

இருட்டையும் சின்ன சின வெளிச்சங்களை மட்டும் வைத்து சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் மிரட்டுகிறது.

ஹார்ர் கதையா, த்ரில்லர் கதையா என்ன மாதிரியான ஜானர் கதை என்பதை யூகிக்க முடியாமல் வைத்து கிளைமாக்சில் டிவிஸ்ட் கொடுத்திருப்பது இயக்குனரின் திறமைக்கு கிடைத்த சபாஷ்.

பெண்கள் மீது கை வைத்தால் இப்படியும் தண்டனை கிடைக்கலாம் ஜாக்கிரதை என மிரட்டியிருப்பதும் ஏற்க்க்கூடியதுதான்.

எல்லாம் புதுசாக இருந்தாலும் பல லாஜிக் ஓட்டைகள், நம்ப மறுக்கும் காட்சிகள் வந்து போனாலும் வீட்டுக்குள் மிரட்டாமல் வெட்ட வெளியில் கார் பயணத்தில் மிரட்டிய இயக்குனரின் புது முயற்சியை பாராட்டத்தான் வேண்டும். இனிமே இருட்டில் தனியாக காரில் செல்பவர்கள் கொஞ்சம் பயந்துதான் போவார்கள்.

மொத்தத்தில் மிரள்… தலைப்புக்கேற்ற மிரட்டல் ரகம்தான்!

  • கோடங்கி

மதிப்பீடு – 3.5/5

341 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன