வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

 

யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

 

சாலை விபத்தும்… வழக்கும் வருமானமும் இப்படி ஒரு லைனை வைத்துக் கொண்டு ஒரு முழு நீள ஷாக்கிங் படம் பாக்கனும்னா “முகுந்தன் உண்ணி அசோசியேட்” தான் பாக்கனும்…

 

யப்பா… யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… பாத்ததென்னவோ மலையாளத்துலதான்… ஆனா… ஒவ்வொரு ஷாட்டும்… ஒவ்வொரு வசனமும் அப்படியே படம் பாக்குற ரசிகனுக்கு புரியிற மாதிரி… அட அட… அடேய் யப்பா அபினவ் சுந்தர்… கொஞ்சம் தமிழ் சினிமா பக்கமெல்லாம் வந்து போப்பா…

 

வினித் சினிவாசன், சுராஜ் இந்த இரண்டுபேர மட்டும் வைச்சிகிட்டு முழுப்படத்தையும் கொஞ்சமும் பதட்டப்படாம… ஆனா படம் பாக்குற ரசிகனை பதட்டப்படுத்தி… சபாஷ் இயக்குனரே…

 

ஒருவரிக்கதை சொல்லனும்னா… வக்கீல் படிச்சிட்டு உதவியாளரா சேரும் ஹீரோ வினித்துக்கு தனியா எந்த கேசும் கிடைக்கல… சீனியர்களும் விரட்டி விட்டுடுறாங்க… அந்த நேரம் பாத்து வீட்டுக்குள்ள பாம்பு புகுந்து அதைப்பாத்து அவங்க அம்மா கிழே விழ கால் முறிஞ்சி போகுது… ஆஸ்பத்திரியில் கட்ட பணம் இல்லாம ஹீரோ நிக்கும் போது விபத்து காப்பீடு விஷயம் தேடி வருது..  அத பாத்து ஷாக்கான ஹீரோ என்ன முடிவு எடுக்குறார்? முழு நேர வக்கீல் ஆனாரா” இதுதான் முகுந்தன் உண்ணி அசோசியேட் கதை.

 

வினித் சீனிவாசன் இவர்தான் ஹீரோ… பாக்க அப்பாவி மாதிரி மூஞ்ச வைச்சிகிட்டு அவர் பன்ற எல்லாம் அடப்பாவி ரகம் தான். வீட்டுக்குள்ள புகுந்த பாம்புக்கு முட்டை வைக்கிறதுல ஆரம்பிச்சி…. அதே பாம்ப வைச்சி அவர் பன்ற அந்த அட்ராசிட்டி அடேங்கப்பா இயக்குனர் அபினவ் கற்பனை கர்ண கொடூரம்…

அதே நேரம் லவ் சொல்லும் போதும் முதராத்திரியின் போதும் வினித் சீனிவாசன் வேற ரகம்தான் போங்க…

இவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் இன்னொரு வக்கீலாக சுராஜ் தன் பங்குக்கு மிரட்டியிருக்கார்…

சாதாரணமா பார்த்து கடந்து போகும் சாலை விபத்து காப்பீடு விஷயத்தில் எவ்ளோ அரசியல் இருக்கு…. ஆஸ்பத்திரிகள் எவ்ளோ கொள்ளை அடிக்கிறார்கள்… சட்டத்தை காக்க வேண்டிய வக்கீல்கள் எப்படி சட்ட்த்தை மீறுகிறார்கள்… என்பதை எல்லாம் பட்டவர்த்தனமாக அடித்து சொல்லி திகிலூட்டியிருக்கிறார் இயக்குனர் அபினவ்.

தனியார் விபத்துகாப்பீடு மோசடி குறித்து தெளிவாக புரியவைத்த்தற்காக இயக்குனர் அபினவ் சுந்தரை பாராட்டலாம்.

வழக்கு கிடைப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள், மனசாட்சியை விற்றுப்போடுவார்கள் என்பதையும், 2 தீர்ப்பு ஏற்கனவே தயாராக இருக்கும்… அதிகார மட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் அதில் ஒன்று வரும் என்பதையும் போகிற போக்கில் சொன்னதற்கும் ஒரு சபாஷ்!

வக்கீல் தொழில்ல இவ்ளோ விவகாரம் இருக்குன்னு வெளிச்சம் போட்டு காட்டுறதுக்கே ஒரு தனி துணிச்சல் வேணும்.

மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம் தான் “முகுந்தன் உண்ணி அசோசியேட்”!

 

  • கோடங்கி

மதிப்பீடு 4/5

 

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன