சனிக்கிழமை, டிசம்பர் 9
Shadow

அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார்.

பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். “அதானி உடனான உறவு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி, தனது நண்பர் அதானியை பாதுகாக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நேற்று அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பணவீக்கம் பற்றி பேசுவதுகூட இல்லை.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி குறிப்பிடக்கூட இல்லை. ஏனென்றால், பிரதமர் பணவீக்கத்தையும் சரி, வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி கண்டுகொள்வதே இல்லை.

பிரதமர் மோடி எதையாவது பார்க்கிறார் என்றால், அது அவரது நண்பரின் தொழிலையும், அவரது முன்னேற்றத்தையும்தான்.

பிரதமர் அவர்களே, இப்போது உங்கள் நண்பரின் பையை நிரப்புவதை நிறுத்துங்கள். நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

162 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன