வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட “இராவண கோட்டம்” – ஸ்பெஷல் ரிப்போர்ட் by கோடங்கி

 

3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட இராவண கோட்டம்!

திரைக்கதை ம்ன்னன் பாக்யராஜ் மகன் சாந்தனு – கயல் ஆனந்தி ஜோடி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் கடந்த வாரம் நடை பெற்றது.

தமிழக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து துபாய் சென்று விழாவில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை.

திரையுலக வரலாற்றில் இடம் பெற்ற இந்த இராவண கோட்டம் படத்திற்கான பட்ஜெட் தலை சுற்றிப் போகும் அளவுக்கு பல மடங்கு எகிறியுள்ளாது திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாற உள்ளது.

தமிழ்கத்தின் வறண்ட நிலப்பரப்பான இராமனாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கருவேலங்காட்டு கதையை தொட்டு உருவாகியுள்ள இந்த இராவண கோட்டம் படத்துக்கு முதலில் திட்ட மிட்ட பட்ஜெட் 3 கோடியாம்.

வழக்கமாக சாந்தனு படங்களின் பட்ஜெட்டை மிஞ்சும் இந்த பட்ஜெட்டை தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி தர முன்வந்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன் தனது காதல் திருமணத்திற்கு இயக்குனர் பாக்யராஜ் உதவி செய்தார் என்ற நன்றிக்காக இத்தனை பெரிய பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

படம் தொடங்கி பாதி படம் முடிவதற்கு முன் திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி படப்பிடிப்பு வேகமெடுக்க… மீண்டும் 3 கோடியை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி.

போட்ட பட்ஜெட் 2 மடங்கு உயர்ந்தபோதும் படப்பிடிப்பு முடியாமல் இழுக்க… மீண்டும் ஒரு 3 கோடி வரை செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி. ஒரு வழியாக 9 கோடி செல்வில் படம் தயாரானது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் நடத்த, நட்சத்திர பட்டாளத்தை அழைக்கவும், பத்திரிகையாளர்களை அழைக்கவும் ஆன செலவு மட்டுமே சுமார் 6 முதல் 7 கோடிவரையாம்.

ஆக சாந்தனு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஆடியோ வெளியீடு வரை சுமார் 15 கோடிகளுக்கு மேல் செலவழித்த பிரமாண்டமான படமாக மாறியுள்ளது இராவண கோட்டம்.

செலவுகள் இதோடு முடியாது… இன்னும் ரிலீஸ் நேர செலவுகள் ஒரு சில கோடிகளை தொடும்.

இத்தனை கோடிகள் செலவழித்தது ஒரே ஒரு நன்றிக் கடனுக்காக என குறிப்பிடுகிறார் தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி.

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கும் இதுபோன்ற தொழில்முனைவோர் நஷ்டப்படாமல் தொடர்ந்து பயணித்து பல நல்ல படைப்புகளை தயாரித்து சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவை, தமிழ் மொழியை உயர்த்தி தாங்களும் உயர வேண்டும் என விரும்புகிறது கோடங்கி குழுமம்.

– கோடங்கி

232 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன