புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

 

இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

தென்னிந்திய டப்பிங் யூனியன் என்றாலே பிரச்சினைகள், பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

அதிலும் குறிப்பாக நடிகர் ராதாரவி தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து சர்வாதிகாரப் போக்கும், எதிர் கேள்வி கேட்பவர்களை சங்கத்தை விட்டு நீக்குவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்பியது.

அதிலும் மிக குறிப்பாக சங்க கட்டிடம் வாங்கியதில், மாற்றி கட்டியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.

அதோடு, அரசின் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கட்டிடம் கட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரசின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருப்ப்தால் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் அரசால் இடிக்கப்படும் என்ற சூழ்லும் நிலவுகிறது.

இந்த சூழலில் சங்க தலைவர் ராதாரவி உட்பட 8 பேர் மீது இளம்பெண் மீது தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு FIR போடப்பட்டது தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

அதோடு, ராதாரவி உட்பட 8 பேரும் கைதாவார்கள் என கூறப்படுகிறது.

எதற்காக இந்த வழக்கு என விசாரித்த போது, டப்பிங் யூனியனின் உறுப்பினராக உள்ள சங்கீதா என்ற பெண்ணை டப்பிங் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில் பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி தாக்கி காயப்படுத்தியதால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் தலைவர் நடிகர் ராதாரவி, செயலாளர் கதிரவன் பாலு (இயக்குநர் TN பாலு மகன்), க‌விதா (இயக்குநர் TN பாலு ம‌க‌ள்) சரவணன் (நடிகர்கள் ராஜேந்திரன்-ஸ்ரீலேகா தம்பதியின் மகன்), கோபால்
( நடிகர் பெரிய கருப்பு தேவர் மகன்), ஜெகதீஷ் (காமெடி ந‌டிக‌ர் அமிர்த‌லிங்க‌ம் ம‌க‌ன்)
கிரிஜா ம‌ற்றும் பிரபு உட்பட 8 நபர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

டப்பிங் யூனியன் பொதுக்குழு உட்பட எந்த நிகழ்வு நடந்தாலும் அதில் ராதாரவியை எதிர்த்து யார் கேள்வி எழுப்பினாலும் இதுபோன்ற அத்துமீறல்கள், தாக்குதல்கள் நடப்பது சர்வசாதாரணம் என்றும், இந்த உறுப்பினர் சங்கீதா தாக்கப்பட்ட விவகாரத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் அது சரியாக விசாரிக்கப்படாமல் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆன பிறகே போலீசார் இந்த புகார் மீது இப்போது FIR பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், தான் பாஜகவில் இருப்பதால் தன் மீது எந்த நடவடிக்கையையும் எடுத்து விட முடியாது என ராதாரவி சங்க உறுப்பினர்களை மிரட்டி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ராதாரவியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஏமாற்றமே மிஞ்சியது.

ஏற்கனவே சங்க பண கையாடல் புகார், அரசு விதியை மீறி கட்டிடம் கட்டிய புகார் இப்போது இளம் பெண் மீது கொலைவெறி தாக்குதல் புகார் என ஏராளமான குற்றச்சாட்டுக்கள் தன்னை நெருக்குவதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பாஜக மேலிடத்தின் உதவியை நாடியதாகவும், பாஜக மேலிடம் கண்டுகொள்ளாமல் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராதாரவி உட்பட 8 பேரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

– கோடங்கி

627 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன