
லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ரொம்ப லக்கிமேன் என்றால் அது யோகிபாபுதான்… லக்கிமேன் என்ற பெயரிலேயே யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கிறது..
நினைவு தெரிந்த நாளில் இருந்தே தான் ஒரு அன் – லக்கி ஆசாமி என கருதிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தான் தொட்ட காரியம் எதுவும் சரிவராது என நினைத்தபடி மனைவி மகனுடன் வாழ்கிறார்.
இப்படியிருந்த யோகிபாபு வாழ்க்கையில் ஒருநாள், சிட்பண்ட் நிறுவனத்தில் கார் பரிசாக கிடைக்கிறது., இந்த கார் தான் தன் வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டமாக நினைக்கிறார்.
மனைவியோ அந்த காரை விற்று, தொழில் தொடங்க சொல்கிறார். ஆனால், யோகிபாபுவிற்கோ அப்படி செய்ய விரும்பாமல்,தனது அதிர்ஷ்டம் இந்த கார் என்று அதை தன்னுடனே வைத்துக் கொள்கிறார்.
கார் கிடைத்த நேரம், செய்யும் வேலையில் அதிகமாக பணம் கிடைக்கிறது சந்தோஷமாக குடும்பம் போகும்போது… லோக்கல் இன்ஸ்பெக்டரான வீராவின் பகையையும் சம்பாதித்துக் கொள்கிறார் யோகிபாபு.
இந்நேரத்தில் தான், அதிஷ்டமான கார் திருடு போகிறது. ஏற்கனவே இன்ஸ்பெக்டருடன் பகை, அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறார் யோகிபாபு. திருடு போன கார் கிடைத்த்தா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.,

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் யோகிபாபுவிற்கு லக்கிமேன் ஒரு மைல் கல் தான். ஒவ்வொரு காட்சியிலும், அவ்வளவு மெனக்கெடலை கொடுத்து பல இடக்களில் சபாஷ் வாங்குகிறார்.
இவரின் மனைவியாக நடித்த ரேச்சல் தேவையான நடிப்பை மட்டும் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
போலீஸாக நடித்த வீராவுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் தரலாம்.
இப்படி கார் பரிசாக வந்த மாதிரியான கதையுடன் பல சினிமா ஏற்கனவே வந்தாலும், லக்கிமேன் மாறுபட்டு வேறு கோணத்தில் பயணப்பட்டு ரசிக்க வைக்கிறது.
முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும் அதை விட்டு விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அதன் மேல் பழி போட்டு புலம்பித்திரியும் பலரும் லக்கிமேன் பட்த்தை ஒருமுறையாவது பார்ப்பது அவசியம்.
முதல் பாதியில் சரியாக பயணப்பட்ட கதை இரண்டாம் பாதியில் சற்றே வேகம் குறைந்து பதட்டப்படுத்தினாலும், க்ளைமாக்ஸில் பேலன்ஸ் செய்து வெற்றிகரமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
எளிமையான கதையை அளவாக சொல்லி, நம்மை சிரிக்கவும், சிந்திக்க வைத்த இயக்குனர் பாலாஜி வேணுகோபாலுக்கு சபாஷ்..
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ரசனை, பின்னணி இசை மேலும் வருடுகிறது.
மொத்தத்தில் லக்கி மேன் ரசிக்கும் ரகம்…
கோடங்கி 3.5/5
