புதன்கிழமை, மே 20
Shadow

எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

 

கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் S.ஹரி உத்ரா.

சமூகத்திற்கு தேவையான கதையை எடுத்த இயக்குனருக்கு அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

கதாநாயகன் சரத் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல், கோபம் என அனைத்திற்கும் ஒரே முகபாவனையை கொடுத்து சலிக்க வைத்துள்ளார்.

பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் இவர் குப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கோச்சிங் கொடுத்து முன்னேற்றி வருகிறார். இதில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கால்பந்தாட்டத்தில் ஒழுங்காக கவனம் இல்லாமல் இருக்கிறார்.

இறுதியில் இந்த இளைஞர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

விளையாட்டு உலகில் திறமையிருந்தும் பல இளைஞர்களின் லட்சியம் எப்படி அழிக்கப்படுகிறது என்பதையும், அங்கிருக்கும் நடைமுறை அரசியலையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சமூக நோக்கத்துடன் சொல்லி தரமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி உத்ரா

222 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன