சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

பார்க்கிங் விமர்சனம் மதிப்பீடு 3/5

 

பார்க்கிங் விமர்சனம் மதிப்பீடு 3/5

சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அந்த வீட்டின் அடித்தளத்தில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார்.

கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங். இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தான்.

ஜாலி பாய் போல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லத்தனம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.  குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.

ஓய்வு பெறப்போகும் ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு சிறந்த அனுபவசாலி நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.  எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படம் அவர் பேசப்படுவார்.

நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பார்க்கிங் படத்தில் ஹீரோ வில்லன் என்ற ஒரு நிலையில் கதையை நகராமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதையும் பார்க்கிங்கில் நடக்கும் பிரச்சனையில் படத்தை தொடங்கி எப்படி எல்லாம் அதை கொண்டு செல்ல முடியும் என்பதை கடைசி வரை சுவராஸ்யமாக நகர்த்தி உள்ளது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சாமர்த்தியம்!

வீடு அலுவலகம் என மொத்தமாக இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் கதை நகர்ந்தாலும் பெரிதாக போர் அடிக்கவில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங்கால் சிரமப்படும் பலருக்கும் இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும். கிராமங்களில் எடுபடாது. மதிப்பீடு 3/5

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன