ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

“பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணபடம் உருவான கதை!

“பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணபடம் உருவான கதை!

 

சில நினைவுகள் மறக்க முடியாதவை… சில நினைவுகள் சட்டென மறக்கும்… சிலது காலம் கடந்தும் நம்மை நினைவுபடுத்தும்… அந்த வகையில் காலங்கள் கடந்தாலும் நான் இல்லாமல் போனாலும் இந்த எங்கள் முயற்சி காலத்துக்கும் நிலையாய் நிற்க்கும் என்றால் அது இது தான்…

ஒருவரின் நினைவிடத்திற்கு குருபூஜை நாளில் ஆண்டு தேறும் வருகிற மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறதே… சாதி மதம் கடந்து ஆட்டம், பாட்டம், முளைப்பாரி, பால் குடம், சிலம்பாட்டம் என களை கட்டும் மக்கள் ஆர்வம் எதனால் என இணையத்தில் தேடிய போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…

காரணம்… லட்சக்கணக்கில் குவியும் மக்களின் ஆதர்ச நாயகன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படங்களோ அவரைப்பற்றிய வரலாறுகளோ பெரிதாக இல்லை…

அப்போது இணையத்தில் “பசும்பொன் தேவர்” எனதேடினால் நடிஅர் திலகம் சிவாஜிகணேசன் புகைப்படம் வரும் அல்லது அவர் நடித்த பசும்பொன் திரைப்பட படங்கள் தென்படும்… அல்லது தேவர் மகன் படங்கள் மட்டுமே வரும்… தேவர் என தேடினால் சின்னப்ப தேவர் படங்கள் வரும்…

இந்த சூழலில் தான் 2006ம் ஆண்டு பின்பாதியில் எங்களின் ஆவண தேடுதல் பயணத்தை தொடங்கினோம்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை உலகிற்கு எடுத்து ஆவண படுத்த ஊர் ஊராக பயணம் செய்தோம்… பல மாத உழைப்பு இதுவரை வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த அன்னாரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று உண்மைகள்… அதற்கான ஆவணங்கள்… உடன் பயணித்தவர்களின் அனுபவ சாட்சிகள்… மறையாமல் வடுவாய் மாறிப்போன “கீழத்தூவல் துப்பாக்கிச்சூடு” உண்மைகள்… அதன் பாதிப்புகள்… மறையாத சோகங்கள்… இப்படி ஏராளமான தகவல்களை திரட்டி… எங்கள் பயணத்தை முடித்து நிமிர்ந்த போது கிட்டத்தட்ட ஓராண்டை தாண்டி இருந்தது.

இந்த ஆவணங்களை இணைத்து ஆவண படமாக உருவாக்கி “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் சென்சார் பெற்று 2008 ஏப்ரல் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்தோம்…

எங்களின் இந்த முயற்சியின் பலனாக இன்று இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான படங்களும், வீடியோக்களுமே அதற்கு சாட்சி…

ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் வணிக ரீதியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே படம் இந்த “பசும் பொன் தேவர் வரலாறு” படம்தான் என்ற பெருமையையும் வரலாற்று சாதனையையும் படைத்தது.

இதாற்காக என்னோடு கை கோர்த்து ஆவணங்களை கொடுத்து… திரட்ட உடன் பயணித்த மரியாதைக்குரிய சகோதரர் நவமணி, வணிக ரீதியாக யோசிக்காமல் வரலாற்றுப் பதிவை உருவாக்க பணம் செலவழித்து தயாரித்த பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்  கார்த்திகேயன் மற்றும் என்னோடு பயணித்த அனைவரையும் இந்த தருணத்தில் நினைத்து நன்றி சொல்கிறேன்..

இப்படி மறக்க முடியாமல் நினைவுகளில் இன்னும் ஒளிந்திருக்கும் இன்னும் பல நினைவுகளை அதற்கான நேரம் வரும் போதெல்லாம் பதிவாய் எழுதுகிறேன்…

 

உங்கள் கோடங்கி ஆபிரகாம்

250 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன