சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5

 

 

காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5

 

தனித்துவம், வேலை, சாதனை என ஆணும் பெண்ணும் ஓடிகொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் பெண்ணோடு காதல் இருக்கலாம் ஆனால் கல்யாணம், குழந்தை எல்லாம் அவசியமில்லை என வாழுகிற ஒருவனை நிச்சயதார்த்தம்வரை கொண்டு வந்த ஒரு பெண் திடீரென அவனை ஏமாற்றி ஓட்டம் பிடித்தால் அந்த ஆண் என்ன செய்வான் என்பதை ஒரு லைனாகவும்,  உருகி உருகி காதலித்தவன் கிடைத்த கேப்பில் வேறு பெண்ணுடன் உல்லாசமாய் இருப்பதை பார்த்த ஒரு பெண்ணும் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை இன்னொரு லைனாகவும் எடுத்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இதில் பரபரப்புக்காக ஆண் துணை இல்லாமல் அறிவியல் வளர்ச்சியால் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கதா நாயகி என ஒரு கதையையும், அதற்கு முன்பாக நண்பனுக்காக உயிரணு சேமிப்பு வங்கியில் தன் உயிரணுவையும் சேமிக்க கொடுக்கும் ஹீரோ கதையும் சொல்லி… அந்த உயிரணு யார் வயிற்றில் குழந்தையாக மாறி வளர்கிறது என்ற தெளிவையும் பார்வையாளர்களுக்கு முதலிலேயே சொல்லாமல் சொல்லி விட்டு இந்த விஷயம் கதையில் இருக்கிற ஹீரோ ஹீரோயினுக்கு தெரிந்து விடுமோ என்ற பரபரப்பை ஏற்படுத்தி எலைட் மக்களுக்கு மட்டுமே புரியும்படி ஒரு திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா.

ஆச்சாரமான குடும்பத்தில் உள்ள ஹீரோயினாக நித்யாமேனன் கல்யாணமே செய்து கொள்ளாமல் ஆண் உயிரணுவை ஐவிஎஃப் மூலம் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு சமூகத்தில் வலம் வரும் அம்மாவாக அழுத்தமான ரோலில் நடித்து இருக்கிறார்.

குழந்தை வேண்டாம் என நினைக்கும் ஹீரோ ரவிமோகன்(ஜெயம்ரவி) தன் உயிரணுவை சேமிக்கும் வங்கியில் கொடுத்து பாதுகாக்கிறார். கடைசியில் அந்த உயிரணுவால் உருவான  குழந்தையின் அம்மாவையே காதலித்து வழக்கம் போல தன் வேலையை கச்சிதமாக செய்கிறார்.

ரவி அப்பாவாக லால், நித்யா அப்பாவாக பாடகர் மனோ, அம்மாவாக லஷ்மி ராமகிருஷ்ணனும், சித்தியாக வினோதினியும் நடித்து இருக்கிறார்கள்.

இதில் மனோ நல்ல கவனம் பெறுகிறார்.

ரவியின் காதலியாக வரும் பானு இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். அதேபோல யோகிபாபு, வினய் இருவரும் கொஞ்ச நேரம் வந்தாலும் கவனம் பெறுகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆண் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, ஆணும் ஆணும் கல்யாணம் செய்து கொள்வது, உயிரணுவை சேமித்து வைப்பது என பல முற்ப்போக்கான விஷயங்களை தனக்கே உரிய பாணியில் சொல்லி வருங்காலம் எத்தனை மாற்றங்களை சந்திக்கப்போகிறது என்பதை ஒரு பெண் இயக்குனர் கிருத்திகா சொல்லியிருப்பது தான் இதில் ஹைய்லைட்!

எல்லாம் சரி… இதெல்லாம் நகரங்களை தாண்டி கிராமங்களில் உள்ள மக்களுக்கு புரியுமா? அதிலும் கலாச்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் நம்ம மக்களுக்கு புரியுமா? என்றால் சந்தேகமே.

மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை ஆணாதீக்கத்தை உடைத்த பெண்ணாதீக்கம். மேலை நாடுகளுக்கு பொருந்தும்!

 

கோடங்கி 3/5

https://x.com/onlykodanki/status/1879211448636674319

 

 

266 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன