சனிக்கிழமை, செப்டம்பர் 5
Shadow

தண்டேல் விமர்சனம் 3/5

 

 

தண்டேல் விமர்சனம் 3/5

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ராஜு (நாக சைதன்யா) அதே சமூகத்தை சேர்ந்தவர் சத்யா(சாய் பல்லவி). மீனவரான ராஜுவும், சத்யாவும் காதலிக்கிறார்கள்.
இந்நிலையில் கிராமத்து மீனவர்களுடன் சேர்ந்து 9 மாத காலம் மீன் பிடிக்க கிளம்பும்  ராஜூவை சத்யா தடுத்தும் கேட்காமல்  மீன் பிடிக்க சென்றபோது தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜு உட்பட சிக்கிய மீனவர்கள் நாடு திரும்பினார்களா? அவர்களுக்கு என்ன ஆனது என்பதே கதை.

முதல் பாதியில் மீன சமூக வாழ்வியல். ராஜு, சத்யாவின் காதல். என நகர்கிறது.  இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் சிக்கியவர்களுக்கு நடக்கும் பிரச்சனை என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. திரைக்கதையில் பிளஸ் மைனஸ் கலந்து இருந்தாலும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்து அதில் ஓரளவு தேறியும் இருக்கிறார் இயக்குநர்.

ராஜு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நாக சைதன்யா. காதல், எமோஷன், ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். வழக்கம் போன்று சாய் பல்லவி  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாக சைதன்யா, சாய் பல்லவி இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது.

கதைக்கு தேவையான பின்னணி இசை பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத் தன் முத்திரையை பதித்து இருக்கிறார்.

 

மொத்தத்தில் தண்டேல் ரசிக்கும் ரகம்!

 

கோடங்கி

3/5

225 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன