
பத்திரிகையாளர் யோகி தேவராஜ் பின்னணி குரலுடன் படம் தொடங்கும் போதே ஒருவித அச்சம் ஏற்படுகிறது…டைட்டில் கார்டு போட்டு முடிவதற்குள் படம் பார்ப்பவர்களை உண்மையிலேயே மிரட்டுகிறது.
கதைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவராக இருக்கும் கிங்ஸ்டன், எப்படியாது பணத்தை சேர்த்து, தனக்கென்று ஒரு போட் வாங்கி, அதில் கடலுக்கு செல்ல வேண்டுமென நினைத்து, அதற்காக தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தனது முதலாளி போதை பொருள் கடத்துவதை தெரிந்து கொள்ளும் கிங்ஸ்டன் அவரிடம் இருந்து விலகுகிறார்.
இதன்பின் துணிந்து கடலுக்கு செல்கிறார் கிங்ஸ்டன். கடலுக்கு போனால் உயிருடன் மீண்டும் திரும்ப முடியாது என தெரிந்தும், தனது நண்பர்களுடன் சேர்ந்து, துணிந்து செல்கிறார். இவர்கள் சொல்லும் கதை உண்மையில்லை என நிரூபிக்க கடலுக்கு செல்லும் கிங்ஸ்டன் மீண்டும் கிராமத்துக்கு வந்தாரா..? கடலுக்குள் அப்படி என்ன இருக்கிறது..? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரே கதைக்குள், ஹாரர், த்ரில்லர், அமானுஷ்யம் என பல ஜானர்களை மிக்ஸ் செய்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்.
கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் விஷூவலும் கிராபிக்ஸ் காட்சிகளும் பின்னணி இசையும் இணைந்து பிரமிக்க வைக்க முயன்றாலும், திரைக்கதை, கதையின் குழப்பத்தால் திரைக்கதை எங்கே செல்கிறது இயக்குனர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதால் ஓட்டை விழுந்த படகாக நடுக்கடலில் தத்தளிக்கிறது கிங்ஸ்டன்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த பட்த்தில் கிராபிக்ஸ் காட்சிகளில் மெனக்கெட்ட இயக்குனர் கொஞ்சம் கதையிலும், தெளிவான திரைக்கதையிலும் மெனெக்கெட்டிருந்தால் கண்டிப்பாக கிங்ஸ்டன் பல ரவுண்டு வந்திருப்பான்.
ஜிவி பிரகாஷ் நடிப்பைவிட இசையில்தான் ஸ்கோர் அடிக்கிறார். ஹீரோயின் பெயருக்குதான் பெருசா நடிக்க ஒன்னும் காட்சிகள் இல்லை… நடுக்கடலில் ஒரே மாதிரியான காட்சிகள் அடிக்கடி வருவதால் சலிப்பைத்தான் தருகிறது.
ஒரே ஒரு புது விஷயம் ஹாலிவுட் படங்களைப்போல கடல் சமாதி என வித்தியாசமான காட்சிகள் புதுசாக இருக்கிறது.
வழக்கமாக தங்க வேட்டையை தரையில, மலையில, பூமிக்கு அடியில கதை சொல்லி பாத்திருக்கோம்… இந்த இயக்குனர் கடலுக்கு அடியில தங்கவேட்டை ஆடுற கதையை சொல்ல டிரை பன்னியிருக்காரு.
பிரமாண்ட முயற்சிதான்… ஆனா திட்டமிடல் சொதப்பல், பலவீனமான கதை, கொஞ்சமும் புரியாத குழப்பமான திரைக்கதையால் நடித்தவர்களின் உழைப்பும், மெகா பட்ஜெட்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
கோடங்கி 2.5/5
