செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

நிறம் மாறும் உலகில் விமர்சனம் 2.5/5

 

நிறம் மாறும் உலகில் விமர்சனம் 2.5/5

அம்மா… இந்த ஒற்றை சொல்லின் தீவிரத்தை சொல்ல முயற்சிக்கும் பல கதைகளை தமிழில் பார்த்து இருக்கிறோம்… அந்த வரிசையில் வந்திருக்கும் படம் நிறம் மாறும் உலகில்.

அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார். லவ்லினின் நிலையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, அம்மா என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’அம்மா’ என்ற உறவு மட்டுமே.

அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், என்று நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.

நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி,  ரியோ ராஜ், பாரதிராஜா – வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் , பின்னணி இசையும் பரவாயில்லை ரகம் தான்.

படத்தில் சொல்லப்படும் நான்கு கதைகளுமே நம்பிக்கையூட்டும் வகையில் எழுதப்பட்டு, சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் கதைகள் நகரும் விதம் சோர்வை தருவதால் எழுத்தின் சுவாரஸ்யம் காட்சிகளில் இல்லை. சோகம்தான் அதிகம் தெரிகிறது.

படமும் மிக நீளமாக முடியாமல் நீண்டு கொண்டே போவதும் சோர்வைத்தருகிறது. மொத்தத்தில் நிறம் மாறும் உலகில் சோகம் தான்!

 

கோடங்கி 2.5/5

 

 

191 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன