வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

குபேரா விமர்சனம் 3/5

 

 

 

குபேரா விமர்சனம் 3/5

 

நம்ப நாட்டு கடல் பகுதியில் ஏராளமான அளவில் கச்சா எண்ணை இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறார்கள். அதை அரசுக்கு சொல்லாமல் மறைத்து ஒரு மந்திரியுடன் டீல் பேசுகிறார் வில்லன். மந்திரியும் அதற்கு லஞ்சமாக ஒரு லட்சம் கோடி கேட்கிறார்.

அந்த ஒரு லட்சம் கோடியை சரியாக பிரித்து தர  சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை நாடுகிறார் வில்லன்.

நேர்மையாக இருந்த்தால் பொய் வழக்கில் சிறையில் இருக்கும் நாகர்ஜுனா இந்த டீலை ஏற்றுக் கொண்டு சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

லஞ்சப்பணத்தை பினாமிகள் பெயரில் மாற்ற அடையாளம் இல்லாத, அடிப்படை அறிவு கூட இல்லாத பிச்சைக்காரர்கள் வேண்டும் என்கிறார். அதன்படி நான்கு பிச்சைக்காரர்களைக் கொண்டு வருகிறது வில்லன் டீம். அந்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவர் தனுஷ். அடிப்படை அறிவு கூட இல்லாத பிச்சைக்காரன் தனுஷ் எப்படி குபேரன் ஆகிறார் என்பதுதான் கதை.

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் தனுஷ்தான்… வளர்ந்த ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தனக்கு சொந்தமாக்கி பார்வையாளர்களை ஷாக் ஆக்குகிறார் தனுஷ். அச்சு அசல் ஒரிஜினல் பிச்சைக்கார்ர்கள் தோற்றுவிடும் அளவுக்கு அந்த கேரக்டராகவே மாறி அசத்துகிறார். அதே நேரம் அந்த நடிப்பே பல இடங்களில் ஓவர் ஆக்டிங் ஆகவும் மாறியிருப்பதை மறுக்க முடியாது.

ஹீரோயின் ராஷ்மிகா ரொம்ப பெரிய மெனக்கெடுதல் எல்லாம் செய்யவில்லை… இருந்தாலும் அவர் நடிக்கும் போது புஷ்பா பட ராஷ்மிகா ஏனோ வந்து வந்து போகிறார்.

வில்லன் எனர்ஜியும் நடிப்பும் தமிழுக்கு கொஞ்சம் அந்நியப்படுகிறது. பாக்யராஜ் இதில் இருக்கிறார்.

பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பல இடங்களில் திரைக்கதையில் இருந்து வெளியே போய் வருகிறது.

இயக்குனர் சேகர் கமூலா இன்றைய அரசியல் சூழலை சொல்ல முயற்சித்து இருக்கிறார். அதற்காக லாஜிக் ஓட்டைகளை மறைக்காமல் கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தின் நீளமும் சோர்வை தருவதால் மொத்தத்தில் ன் நல்ல கதையை யோசித்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் குபேரா கவனிக்கப் பட்டிருப்பான்.

இருந்தாலும், இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது என்ற கருத்துக்கு சபாஷ் போடலாம்!

 

கோடங்கி

3/5

 

 

 

101 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன