
சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் விமர்சனம் 3/5
இன்ஷூரன்ஸ் கம்பெனியை ஏமாற்ற நினைக்கும் பிரபல தாதாவால் போலி திருட்டில் ஈடுபட்டு அதை குடிபோதையில் தொலைத்து அதை சரி செய்ய வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஹீரோவின் காமெடி கதைதான் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.
லாஜிக் எல்லாம் பார்க்காம மினிம்ம் கியாரண்டி சிரிப்பு மட்டும் தான்னு யோசிச்சி படம் எடுத்திருப்பாங்க போல…
மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில், லிவிங்ஸ்டன், பிபின், சாம்ஸ் ஷிஹான் ஹுசைனின்னு ஒரே காமெடி நடிகர் பட்டாளம்… இந்த கும்பலோடு வைபவ் – அதுல்யாரவிஜோடி.
கதைன்னு சொல்லனும்னா… தாதா ஹூசைனி அவர் இன்சூரன்ஸ் கம்பெனிய ஏமாத்த தன் வீட்டுல கொள்ளை போன மாதிரி செட் செய்ய நண்பன் லிவிங்ஸ்டன் உதவிய கேக்குறார்… அவரும் வைபவ் அவர் நண்பனை லிவிஸ்டன் வீட்டுக்கு அனுப்பி கொள்ளை டிராமவை ஆட சொல்றார். ஹூசைனி வீட்டுக்கு போறதுக்கு பதில் வைபவ் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டுக்கு தப்பா போய் அப்பறம் எப்படியோ ஹூசைனி வீட்டுக்கு போய் கொள்ளையடிசிகிட்டு போறாங்க… போற வழியில சரக்கு போட்ட்தால பணம் இருந்த பை தொலைஞ்சி போகுது…
தாதா ஹூசைனிக்கு பணத்த திருப்பி குடுக்க ஒரு வங்கிய கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க… வைபவ் கோஷ்டியோட ஆன்ந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான்விஜய், சுனில், ரெடின் கிங்ஸ்லி கூட்டு சேர…. இவங்களுக்கு உதவியா அதுல்யாரவியும் கை கோர்க்க கொள்ளை திட்டம் ரெடி ஆகுது. பூமிக்கு அடியில சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்க திட்டம் போடுறாங்க…. அந்த திட்டம் சக்சஸ் ஆச்சா… மாட்டிகிட்டாங்களா? என்பதை இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இருவரும் காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்துலயே சொன்ன மாதிரி லாஜிக் பாக்காம பட்த்த பாருங்க ரசிக்கலாம்… முதல் பாதியவிட 2ம் பாதி பரவாயில்லை ரகம்.
சீரியசான வங்கி கொள்ளை படங்களில் இந்த சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் சிரிப்பு வங்கி கொள்ளைப்படம். எப்படி கொள்ளை அடிக்க முடியாதோ அப்படி போகிறது திரைக்கதை.
திரைக்கதை சுரங்க செட், வங்கி லாக்கர் செட், கட்டுக்கட்டாக போலி கரன்சி எல்லாம் அமைத்தவர்கள் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிரித்திருக்கலாம். டி இமான் இசை, டிஜோ டோமி ஒளிப்பதிவும் பல இடங்களில் பலம் சேர்க்கிறது.
ரொம்ப காஸ்ட்லியான காமெடி வங்கி கொள்ளைப் படம்… போட்ட காசை தயாரிப்பாளர்கள் எடுப்பாங்களா என்பது படம் பாக்கும் ரசிகர்களை பொறுத்தது.
கோடங்கி
.
