
“Good Day” கோடங்கி விமர்சனம் 2.5/5
நடிகர்கள் :
பிரித்திவிராஜ் ராமலிங்கம்
காளி வெங்கட்
மைனா நந்தினி
ஆடுகளம் முருகதாஸ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)
வேல ராமமூர்த்தி
போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்)
ஜீவா சுப்பிரமணியம்
பாரத் நெல்லையப்பன்
தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்
இயக்குனர் : N அரவிந்தன்
திரைக்கதை | வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
கேமரா & படதொகுப்பு : மதன் குணதேவ்
பாடலாசிரியர் & கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா
இசை : கோவிந்த் வசந்தா

திருப்பூரில் பனியன் கம்பெனியில் சூப்ரவைசராக வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் ஒரு இரவு கதை தான் குட்டே.
ஒரு இரவில் அவன் சந்திக்கிற மனிதர்கள், அங்கே ஏற்ப்படுகிற பிரச்சினைகள் அதற்கு அவன் காட்டுகிற எதிர்வினைகளை மிக யதார்த்தமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் அரவிந்தன்.
தயாரிப்பாளராகவும் கதை நாயகனாகவும் மாறி இருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நிஜ “குடிமகன்” தோற்கும் அளவுக்கு நடித்து இருக்கிறார். முதல்பாதிவரை அவர் நடிப்பில் இருந்த யதார்த்தம் 2ம் பாதியில் காணாமல் போய் ஹீரோ வாக முயற்சிக்கிறார்.
நல்ல முயற்சி… ஆனால் நள்ளிரவு 3 மணிக்கு சுடுகாட்டு காட்சிகள், நரபலி காட்சிகள் எல்லாம் படத்தின் தன்மையை மாற்றுவதால் குட் டே சில நேரங்களில் பேட் டே ஆக மாறுகிறது.
யதார்த்தமான வாழ்வில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை உறுதி செய்யும் விதமாக ஆடுகளம் முருகதாஸ்- மைனா நந்தினி ஜோடியிடம் பிரித்திவிராஜ் செய்யும் பிறந்த நாள் அலப்பறையை சொல்லலாம்.
போலீஸ் எஸ்.ஐ. ஆக வரும் ஜீவா நல்ல போலீசாக மிக கேஷுவலாக தன் இடத்தை தக்க வைக்கிறார்.
இதுபோன்ற படத்திற்கு என்ன தேவையோ அதை இசையாக கொடுத்து இருக்கிறார் கோவிந்த் வசந்தா. இரவின் அழகை முடிந்த மட்டும் சரியாக படம் பிடித்து திரைக்கதைக்கு வலுசேர்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
கோடி கோடியாக கொட்டி கற்பனை கதைகளை படம் எடுக்கிற இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோக்கள் யதார்த்தமான வாழ்க்கையை படம் பிடித்தாலே ரசிகர்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும்.
குடி எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போடும் குடியை விட என்ன செய்யனும்னு போற போக்குல அட்வைஸ் வேற…
ஒட்டுமொத்தமாக குட் டே படத்தைப் பற்றி சொல்லனும்னா ஒன் டே கதை குட் டே வா இருக்கனும்னு ஒன் டே கதையை எடுத்திருக்காங்க லாஜிக் பாக்காம ஹீரோயிசம் மறந்து பாத்தா பேருக்கு ஏத்தா மாதிரியே குட் டே… நல்ல நாள் தான்!
கோடங்கி 2.5/5
