வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3
Shadow

இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயனின் சகலை!

 

ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி.

இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.
இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ்,சிங்கம்புலி,மிர்ச்சி விஜய்,கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.பிரவீன் போத்தன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார்அறிமுக கலை இயக்குனராக பிரதீபராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன்.பிகே இப்படத்தினை இயக்குகிறார்.இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரொடக்சன்ஸ் நிறுவனத்தைப் பார்த்துக் கொண்டவர் கலையரசு. தற்போது அவரே ரோல் டைம் எனும் புதியதயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம், ‘மேடி’ படத்தைத் தயாரிக்கிறார்.

இப்பட்த்தின் பூசை மற்றும் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.இந்த பூசையில் சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்து நடிகர் சூரி ரோலிங் சொல்லி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் சொல்லி படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படைப்பு அனைத்துத் தரப்பு இரசிகர்களும் இரசிக்கும் படமாக இருக்கும்.முக்கியமாக இளைஞர்களைக் கவரும் திரைப்படமாக உருவாகிறது.  திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், கதை விவரங்கள், மற்றும் வெளியிட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மொத்தப் படப்பிடிப்பையும் ஒரேகட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்தப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திகேயன்.பிகே, நடிகர் சிவகார்த்திகேயனின் சகலை.அதாவது,சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியின் தங்கை கணவர்.

இவர், ஹிப்ஹாப் தமிழா ஆதி,தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி,லோகேஷ் கனகராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

அவர் இயக்குநராக வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன்,தன்னிடம் பணிபுரியும் கலையரசுவை ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கச் செய்து அதன்மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

24 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன