வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3
Shadow

’காளிதாஸ் 2’ திரைப்பட விமர்சனம்

 

 

ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர்  ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காளிதாஸ் 2’

சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள்  4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மறுநாள் புதுவருடம் பிறப்பதால் அந்த குடியிருப்பில் ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே சமயம் அபர்ணாதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதனையடுத்து குழந்தையை கண்டுபிடிப்பதற்காக  காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அங்கு வருகிறார்கள்.

அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி ஏற்கனவே சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர் என்பது தெரிய வருகிறது.  அவரை கைது செய்து விசாரிக்கையில் காணாமல் போன குழந்தையின் சடலம்  கிடைக்கிறது.

இதே வேளையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மற்றொரு சிறுமியை உடல் கிடைக்க அதை பார்த்து பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இறுதியில் பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் சேர்ந்து  உண்ணையான  கொலைகாரன் யார் ? என்பதை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ?   இளைஞர் அஜய் கார்த்தி  சிறையில் இருந்து வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதே  ’காளிதாஸ் 2’ .

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டும் வகையில் உள்ளது. உடை, நடை, பேச்சு , சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது.    படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இவர் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கதாபாத்திரத்தை உள் வாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் மையக்கரு ஒரு சம்பவம் என்றாலும், அதற்கான திரைக்கதையில் பல்வேறு குற்ற சம்பவங்களை இணைத்து, அதன் மூலம் பல்வேறு திருப்பங்களோடு படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், குற்றவாளி யார் ? என்பதில் கடைபிடித்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.

படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டினாலும், திரைக்கதையில் அவர்களுக்கான பங்களிப்பு அதிகம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கும் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், கதையில் இருக்கும் ஒரு சம்பவத்துடன், பல குற்ற சம்பவங்களை இணைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு படத்தை வேகமாக நகர்த்தி சென்றாலும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதன் பணிச்சுமை ஆகியவற்றுடன் அதிகாரிகளின் இக்கட்டான சூழ்நிலையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் பார்வையாளர்களை இழுத்து விடும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், அடுத்தடுத்த காட்சிகளில், கதையை பல அடுக்குகளாக மாற்றி, ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு திருப்பம், ஒரு சஸ்பென்ஸ் என்று படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதோடு, இறுதிக் காட்சியிலும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து ‘காளிதாஸ்’-ன் வெற்றிப் பயணம் 2ம் பாகத்தையும் கடந்து தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ வெற்றிப் பயணம் 2ம் பாகத்தையும் கடந்து தொடரும்!

20 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன