சனிக்கிழமை, மே 2
Shadow

கர கோடங்கி விமர்சனம் 3/5

 

 

 

கர கோடங்கி விமர்சனம் 3/5

 

வங்கியில் டிராக்டர் (Tractor) வாங்குவதற்காகத் தன் நிலத்தை அடமானம் வைக்கிறார் நாயகனின் தந்தை.

வட்டி கட்ட முடியாத சூழலில் வங்கி அந்த நிலத்தை ஜப்தி செய்ய முற்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் தந்தை இறந்துவிட, தன் சொந்த நிலத்திலேயே அவரை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கிறார் நாயகன்.

தந்தையின் கடனைத் திருப்பிச் செலுத்தி, அந்த நிலத்தை மீட்டு, அங்கேயே அவரை அடக்கம் செய்ய நாயகன் எடுக்கும் போராட்டமே படத்தின் மையக்கதை.

1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது.

திருடனாக இருந்த வால்மீகி திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கர பட கதை.

படத்தின் முதல் 40 நிமிடங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

அதன் பின்னரே படம் வேகம் எடுக்கத் தொடங்குகிறது. இன்னும் எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தனுஷின் நடிப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம் எப்போதும் போல தன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

மம்தா நடிப்பு ஓகே, ஆனால் தனுஷிற்கு ஜோடியாக ஈடு கொடுத்து நடிக்கும் அளவுக்கு காட்சிகள் இல்லை. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் கெட்டப்பையே மாற்றி நடிக்க வைத்தும் ஏதோ ஒட்ட மறுத்து அந்த கதாபாத்திரம் தள்ளியே நிற்கிறது. அவரையும் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம் கெட்டப் மாற்றம் இல்லாமல்.

வங்கி மேலாளராக வரும் ஜெயராம் நடிப்பிலும் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம். தனுஷின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, உறுதிமிக்க கிராமத்து அம்மாவாகவே மாறியிருக்கிறார்.  தனுஷின் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ் பாத்திரமும் அதில் அவர் நடிப்பும் அருமை.தனுஷின் நண்பராக வரும் பிருத்வி பாண்டியராஜன், காவலதிகாரி சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரும் பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்கள்.

ஜிவி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல இடங்களை இவருடைய பின்னணி இசை தான் கதையையும் திரைக்கதையையும் தாங்கிப் பிடிக்கிறது.

முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகமெடுத்தாலும் ஒட்டுமொத்த திரைக்கதையின் மெதுவான ஓட்டத்தால் சோர்வும், சலிப்பும் வந்து வந்து போகிறது.

மொத்தத்தில் கதையிலும் திரைக்கதையிலும் இயக்குனர் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம். பட்த்தின் காட்சியமைப்புகளும், பின்னணி இசையும் தான் படத்தின் பலம்.

கர வெற்றிக்கு போராடும்!

கோடங்கி 3/5

 

16 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன