வியாழக்கிழமை, அக்டோபர் 29
Shadow

இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்பபோவதாக சுவர்சித்திரங்கள் வரைப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுள் ஒருவராக வலம் வருகிறார். அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு கூடியுள்ளது.
ஆங்காங்கே சுவர்களில், மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம் என்று வரையப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன