செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

 

 

இந்துக்கள் மனம் புண்படும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலங்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசு குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், மேலும் பல இடங்களிலும் இந்துக்கள் குறித்து மோசமாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் அறுபது வயது மாநிறம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது

364 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன