செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!

 

பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், தயாரிப்பாளர் வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 20–க்கும் அதிகமான இடங்களில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறினர்.

படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்றார்கள். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பினர். நடிகை கவுதமி உள்ளிட்ட மேல் முறையீட்டு குழுவினர் படத்தை பார்த்து சிவா, புஷ்பா என்ற கதாபாத்திரங்கள் பெயரையும் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று கூறினர்.

படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வாராகி சம்மதிக்காததால் மீண்டும் படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து டைரக்டர் வாராகி கூறும்போது, ‘‘சிவா மனசில புஷ்பா படத்துக்கு கவுதமி தலைமையிலான மேல்முறையிட்டு குழுவினர் அனுமதி மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிக செலவு செய்து படத்தை எடுத்துள்ளோம். தனிப்பட்ட நபர்கள் யாரையும் படத்தில் அவதூறு செய்யவில்லை. தலைப்பை மாற்றமாட்டோம். டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பி வைப்போம் அங்கும் அனுமதி கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்வோம்’’ என்றார்.

தணிக்கைத்துறை பல முட்டுக்கட்டைகள் போட்டதாலும், காட்சிகள், வசனங்களில் அதிக அளவில் கட் கொடுத்ததோடு குறிப்பாக படத்தின் பெயரை மாற்றினால் மட்டுமே சென்சார் அனுமதி தருவோம் என கூறியதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் இயக்குனர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை துறையின் தடையை நீக்க வேண்டி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (29.8.2018) உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,

மனுதாரரின் விளக்கத்திற்கு பின் தணிக்கை துறைக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்ற செப்டம்பர் 3தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.

தணிக்கை துறைக்கு விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– கோடங்கி

398 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன